ரூ.1.3 கோடி அபராதம் விதிப்பு ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் அசத்தல்!
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில், சாலை விதிமுறை மீறிய வாகனங்களிடம் இருந்து, கடந்த ஆறு மாதங்களில், ஒரு கோடியே 3 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறங்களில், ஆறு 'சிப்காட்' தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, நாட்டின்பல மாநிலங்களில் இருந்து, வாகனங்கள் வந்து செல்கின்றன.
மேலும், சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் வழியே, தினமும்லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில், வாகன பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல வாகனங்கள் அதிக சுமை ஏற்றி செல்வது, மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களால் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன.
விபத்தை தடுக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகன சோதனையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறையை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகமோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில், கடந்த ஆறு மாதங்களில், போக்குவரத்து விதிமுறையை மீறிய 765 வழக்குகளில், ஒரு கோடியே 3 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்.
இதில், 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை, சம்பவ இடத்திலேயே வசூலித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 6 மாதங்களில் சாலை பாதுகாப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட அபராதம் விபரம்
அதிக சுமை 95,50,000அதிக வேகம் 1,05,000சீட் பெல்ட் 1,75,000தலைக்கவசம் 30,000அதிக ஒலிப்பான் 3,20,000பார்க்கிக் லைட் இயக்காதது 75,000 ரிப்ளெக்டர் பொருத்தாதது 42,500மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் 20,000மொத்தம் 1,03,17,500
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!