புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், நேற்று நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, அதே வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் ஜெயவேல் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி ராஜவீதி வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இதில், வாலாஜாபாத் அரசு பள்ளி மாணவ- - மாணவியர் பலர் பங்கேற்றனர். வயது வந்தோருக்கு கல்வி கற்க வேண்டும் என, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
இதில், ஏனாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஏழுமலை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!