தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, கொரோனா தாக்கம் காரணமாக, கவர்னர் மாளிகையில் வழக்கமாக நடக்கும் தேநீர் விருந்தை, கவர்னர் தள்ளி வைத்தார்; வேறொரு நாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.அதன்படி, கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்கும்படி முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பங்கேற்கவில்லை
அப்போது, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும், சட்ட முன்வடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்தன; அதன்படி பங்கேற்கவில்லை. ஆனால், பா.ஜ., - அ.தி.மு.க., கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இம்மாதம், கவர்னர் மாளிகையில், பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்கும்படி, முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. கவர்னர் உடனான மோதல் காரணமாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பங்கேற்கவில்லை. ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தையொட்டி, இன்று மாலை 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில், 'குடியரசு தின வரவேற்பு விழா' என்ற பெயரில், தேநீர் விருந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கம்போல், தி.மு.க., கூட்டணி கட்சிகள், கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து விட்டன.
காலம் தாழ்த்தி வரும் கவர்னர்
தேநீர் விருந்து புறக்கணிப்பு தொடர்பாக, சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி:கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளோம். கவர்னர் தொடர்ந்து, தமிழக மக்களுக்கு எதிராகவும், பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 'நீட்' தேர்வு, 'ஆன்லைன்' ரம்மி, பல்கலை சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். இது தமிழகத்தின் எதிர்கால நலனை பாதிக்கும்.
புறக்கணிப்பு
'ஆன்லைன் ரம்மி' மசோதாவுக்கு, அவர் ஒப்புதல் அளிக்காததால், சட்டம் இயற்றிய பின், 11 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு கவர்னர் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதியிடம் தி.மு.க., தலைவர்கள், சட்ட அமைச்சர் புகார் அளித்த பின், 'கவர்னர் திருந்தி விட்டார்; இனி அரசியல் செய்ய மாட்டார்' என்றனர். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில், மீண்டும் சனாதனம் குறித்தும், தமிழக வரலாறு குறித்தும் பேசி உள்ளார். தமிழக அரசுக்கு எதிராக, தமிழக மக்கள் உணர்வுக்கு எதிராக பேசி வருகிறார். இதைக் கண்டித்து, அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம். தமிழக நலன், தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பர்; அக்கறை உள்ளவர்கள் புறக்கணிப்பர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதேபோல், தி.மு.க., கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவையும், கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.தி.மு.க.,வின் அறிவுரைப்படியே, அதன் கூட்டணி கட்சிகள் கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.குடியரசு தின விழாவையொட்டி, இன்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும்படி, முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் செயலர் ஆனந்தராவ் பாட்டில்,நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துஅழைப்பிதழ் வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை, கவர்னர் ரவி தொலைபேசியில், முதல்வரை தொடர்பு கொண்டு, தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (42)
கொள்ளையடிப்பதற்கு ஆட்டுத் தாடி முட்டுக்கட்டையாக உள்ளது என்பதே எங்கள் கோபம். அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதை எதிர்க்க முடியாது. ஆகவே திசை திருப்ப தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக மத்திய அரசும் ஆட்டுத் தாடியும் செயல்படுகிறார்கள் என்று உருட்டுகிறோம். வழக்கம் போல எங்கள் கொத்தடிமைகளும், உ பீய்ஸ் ஆமாம் சாமி போடுகிறார்கள் ....
ENNA GOVERNER SIR INDHA DRAVIDA MODEL AATCHILA eppadi irukuthu
அடடா..
ஆன்லைன் லாட்டரி சட்ட மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாமல் ஏன் காலதாமதம் செய்ய வேண்டும் என்று இங்கு பலரும் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். ஏற்கனவே இதே போன்று பல ஓட்டைகளை வைத்து சட்டம் இயற்றியதால்தான் இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே இம்முறையும் சரியான முறையில் சட்டம் இயற்றவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தில் இந்த கேஸ் தள்ளுபடியாகும் அதனால்தான் கவர்னர் பழையது போல் அல்லாமல் மேற்கொண்டு வலுவான சில சரத்துகளை அதில் சேர்க்க சொல்கிறார். ஆனால் இவர்களுக்கு கோர்ட்டில் தள்ளுபடியாகும் என்று தெரிந்தே ஏற்கனவே இப்படி வலுவில்லாமல் இயற்றிய அதே சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறார்கள். திமுகவினரை பொறுத்த வரை இந்த ஆன்லைன் லாட்டரி வழக்கு இவர்கள் ஆட்சியில் இருக்கும்வரை இழுத்துக் கொண்டே இருக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும் இது முடிந்து விடக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம்.
It should be viewed as governor inviting Chief Minister. It is part of protocal and should be maintained. It is not a fight between Ravi sir & Stalin sir. There can be difference of opinion and the administrative experts should work towards finding an amicable solution benefiting people. Lack of knowledge and capability of handling such issues by Administartive experts turn these issues in to an ego issue to cover up their incompetence which is not a healthy sign.