ஹான்ஸ் விற்பனை 2 பேர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஹான்ஸ் விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 57. இவர் கடையில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருள் விற்பனை செய்வது குறித்து, சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை, அந்த கடைக்கு சென்ற போலீசார், சோதனை செய்த போது, விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
கடையில் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
அதே போல, காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்தவர் விஜய், 32. காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை, சிவ காஞ்சி போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!