Load Image
Advertisement

போட்டோ ஸ்டுடியோவே என் உலகம்!

Tamil News
ADVERTISEMENT


சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில்,'ரெயின்போ' என்ற, 'போட்டோ ஸ்டுடியோ'வை நடத்தி வரும் நவநீதம் அம்மாள்: இந்த ஸ்டுடியோவை, 1992ல் மூத்த மகன் துவக்கினான். தொழில் ரீதியாக அவன் வளர்ச்சி அடைந்ததை, கண்குளிர பார்த்து ரசித்த போது, இடியாக இறங்கியது அந்தச் சம்பவம்... 1998ல், என் மூத்த மகன் இறந்தான்.

அந்த நேரத்தில், அடுத்த மகனையும், மகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்று கலங்கி நின்றபோது, மூத்த மகன் நடத்தி வந்த ஸ்டுடியோவை நாமே நடத்தினால் என்ன என்று தோன்றியது.

மகன் உயிருடன் இருந்தபோதே, எனக்கு போட்டோ எடுக்கவும், 'பிலிம்' கழுவவும் சொல்லிக் கொடுத்திருந்தான்.

அவன் இறந்த பின், ஸ்டுடியோவை நானே நடத்துறேன்னு சொன்னதும், யாருமே ஆதரவு தரவில்லை; ஆனாலும்,மகன் இறந்த சோகத்தை விழுங்கியபடி, குடும்பத்திற்காக ஓடத் துவங்கினேன்.

அவன் விட்டுச்சென்ற ஸ்டுடியோவை நடத்த ஆரம்பித்த எனக்கு, இன்றும் நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு.

திரும்பிப் பார்ப்பதற்குள், 25 ஆண்டுகள் ஓடி விட்டன. நான் நடத்த ஆரம்பித்த நாளில்இருந்து, இப்போது வரைக்கும், ஸ்டுடியோவை ஒரு நாள் கூட மூடியதில்லை.

ஆரம்பத்தில் ஸ்டுடியோவுக்கு வர்றவங்க, 'நீங்களா போட்டோ எடுப்பீங்க'ன்னு ஆச்சரியமாக கேட்பாங்க.

போட்டோ எடுத்து, 'பிரின்ட்' போட்டு கையில் கொடுக்கும் போது, என்னை பிரமிப்புடன் பார்ப்பர். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாஸ்டுடியோவை வளர்த்து எடுத்துட்டேன்.

என்கிட்ட போட்டோ எடுக்கவும், பிரின்ட் போடவும் கற்றுக் கொண்ட ஒருவர், இன்று ஆறு ஸ்டுடியோ வைத்திருக்கிறார்; இன்றைக்கும் என்ன சந்தேகம் என்றாலும், என்னிடம் தான் கேட்பார்.

திருமணமான கையோட தம்பதியாக சேர்ந்து வருவோரை, போட்டோ எடுக்கும்போது கிடைக்குற சந்தோஷமே தனி. என் இளைய மகனுக்கும், மகளுக்கும் திருமணம் செய்து வெச்சிட்டேன். பேரன், பேத்தியோட வாழ்க்கை நிறைவா இருக்கு.

இத்தனை ஆண்டுகளாக என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும், போட்டோ ஸ்டுடியோவை, ஒருபோதும் விட்டுடக் கூடாதுன்னு தோணுது. கடைசி வரைக்கும் அந்த ஸ்டுடியோ தான் என் உலகம்!
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (1)

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    பெருமை படக்கூடிய விஷயம், சவாலான பணியிலும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளேர்கள் . மேலும் வளர வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement