திருப்புலிவனம் கலை கல்லுாரியில் அறிவியில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில், அரசு கலை அறிவியில் கல்லுாரி, 2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரி என்ற பெயரில் இயங்குகிறது.
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மற்றும் மதுராந்தகம் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் இக்கல்லுாரியில் பயில்கின்றனர்.
இக்கல்லுாரிக்கென அறிவியில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என, மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், 2022- - 23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை அறிவிப்புக்கு இணங்க 55 அரசு கலை கல்லுாரிகளில், வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய்க்கு அரசு நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் இயங்கும் அரசு கலை கல்லுாரியில், புதிதாக அறிவியில் ஆய்வுக்கூடம் கட்ட 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணி, பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!