வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை திசைமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்:வந்தவாசியில் இருந்து, காஞ்சிபுரம் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், வேலுார், கலெக்டர் அலுவலகம், உத்திமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல எந்த திசையில் திரும்ப வேண்டும் என தெரிந்து கொள்ளும் வகையில், செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு அருகில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டி பெயர் பலகையை, சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் நீண்டு வளர்ந்து, வழிகாட்டி பலகையை மறைத்துள்ளது.
இதனால், வந்தவாசி சாலையில் இருந்து வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் திசையில் திரும்பாமல், வழி தவறி, பிற ஊருக்கு செல்லும் நிலை உள்ளது.
வழிகாட்டி பெயர் பலகை இருந்தும், வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, வழிகாட்டி பலகையை மறைக்கும் சாலையோர மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!