ADVERTISEMENT
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் அருகே, மதுரமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு, பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும்.
மதுரமங்கலத்தில் எம்பார் சுவாமி அவதரித்த உற்சவ விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதேபோல இந்த ஆண்டு, எம்பார் சுவாமியின் அவதார உற்சவ விழா நேற்று துவங்கியது.
காலை பல்லக்கிலும், மாலை மங்களகிரி வாகனத்திலும் எம்பார் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரும் 28ம் தேதி ஹம்சவாகனத்திலும்; 29ல் சந்திரபிரபை; 30ல் குதிரை வாகனம்; 31ல் யானை வாகனம்; பிப். 2ம் தேதி திருத்தேர்; 4ம் தேதி கந்தபொடி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!