ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் பெறலாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் முகமது ரபிக் கூறியதாவது:
வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி மற்றும் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கு, ஆய்வுசெய்த பிறகே, விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு, கூடுதலாக செலவாகிறது என, பல்வேறு தரப்பினர் அரசிற்கு தெரிவித்தனர்.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் பதிவு செய்த, முதல் ஏற்றுமதியாளர்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இந்த மானியம் பெறுவதற்கு, http://agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆர்சிஎம்சி சான்றிதழ், முதல் முறையாக ஏற்றுமதி செய்த சான்று, ஆய்வக சோதனை செய்த ரசீது உள்ளிட்ட பலவித ஆவணங்களுடன் ஜன., 31ம் தேதி வரை விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!