ADVERTISEMENT
புதுடில்லி,உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பார்க்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. 'இந்தாண்டு ஜன., ௧ வரையிலான தீர்ப்புகள் இதில் இடம்பெறும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், 'டிஜிட்டல்'மயமாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது பெரிய அளவில் உதவியது. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
தற்போது வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, 'சுப்ரீம் கோர்ட் ரிபோர்ட்ஸ்' என்ற தனி இதழ் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். இது பல்வேறு வழக்குகளில் வாதிடுவதற்கு வழக்கறிஞர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது.
இந்த நீதிமன்ற தீர்ப்புகளை, மின்னணு முறையில் அளிக்கும், இ - எஸ்.சி.ஆர்., என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, ௩௪ ஆயிரம் பழைய தீர்ப்புகள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த மின்னணு தீர்ப்புகளை, வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்க்கும் வசதி விரைவில் துவக்கப்படும் என, ஜன., ௨ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதன்படி, இந்த வசதியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று துவக்கி வைத்தார். இந்த சேவையை, இன்று முதல் பார்க்க முடியும். இந்தாண்டு, ஜன., ௧ம் தேதி வரையிலான தீர்ப்புகள் இனி பிராந்திய மொழிகளில் பார்க்க முடியும்.
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று கூறியதாவது:
அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணை யில், தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, சமஸ்கிருதம், உருது உட்பட, ௨௨ மொழிகள் இடம்பெற்றுஉள்ளன.
இந்த, அட்டவணையிடப்பட்ட மொழிகள் அனைத்திலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, மின்னணு முறையில் பார்க்கும் வசதி படிப்படியாக அறிமுகமாகும்.
தற்போதைய நிலையில், ௩௪ ஆயிரம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், மின்னணு வடிவில் உள்ளன. இதைத் தவிர, ௧,௦௯௧ தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் உள்ளன. இவற்றை குடியரசு தினத்தில் இருந்து பார்க்க முடியும். இந்தாண்டு ஜன., ௧ம் தேதி வரையிலான தீர்ப்புகள் இந்த இணையதளத்தில் இருக்கும்.இவற்றை 'மொபைல் ஆப்' உள்ளிட்டவற்றிலும் பார்க்க முடியும்.
தற்போதைக்கு, ஒடியா மொழியில் ௨௧, மராத்தியில் ௧௪, அசாமிசில் நான்கு, கன்னடாவில் ௧௭, மலையாளத்தில் ௨௯, நேபாளியில் மூன்று, பஞ்சாபியில் நான்கு, தமிழில் ௫௨, தெலுங்கில் ௨௮, உருதுவில் மூன்று தீர்ப்புகள் உள்ளன.அனைத்து தீர்ப்புகளும், அனைத்து மொழிகளிலும் இடம்பெறுவது போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!