ADVERTISEMENT
மைக்ரோசாப்ட்: 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில் 12 சதவீதம் சரிவைக் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், மதிப்பீட்டு காலத்தில், ஒரு பங்குக்கு கிட்டத்தட்ட 180 ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டி உள்ளது.
டாடா மோட்டார்ஸ்: கடந்த டிசம்பர் காலாண்டில், இந் நிறுவனம் மீண்டும் லாபப் பாதைக்கு திரும்பி உள்ளது. இக்காலாண்டில் இந்நிறுவனம் 3,043 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே டிசம்பர் காலாண்டில், இந்நிறுவனம் 1,451 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் வங்கி: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து, 1,396 கோடி ரூபாயாக உயர்வை கண்டுள்ளது.
வட்டி வருவாய் அதிகரிப்பு, வாராக் கடன் குறைந்தது ஆகிய காரணங்களால், வங்கியின் நிகர லாபம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ: இந்நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில் 3 சதவீதம் அதிகரித்து 1,473 கோடி ரூபாயாக உயர்வைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், உள்நாட்டில் வாகன விற்பனை அதிகரித்ததை அடுத்து, நிகர லாபம் அதிகரித்துள்ளதாக, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா காபி: 'டாடா' குழுமத்தைச் சேர்ந்த, 'டாடா காபி'யின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில் 45 சதவீத சரிவைக் கண்டு, 38. 40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், நிகர லாபம் 69.46 கோடி ரூபாயாக இருந்தது.
பணவீக்க அழுத்தங்கள் காரணமாக, சில இடங்களில் 'இன்ஸ்டன்ட்' காபி விற்பனையில் பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து, லாபம் குறைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!