ADVERTISEMENT
சென்னை:'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், துாத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் 50 நகரங்களில், ஒரே நாளில், அதன் 5ஜி சேவைகளை துவங்கி உள்ளது.
தொலைதொடர்பு துறையை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஒரே நாளில், 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில், தன்னுடைய 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை துாத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மூன்று நகரங்களுக்கு இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை ,184 நகரங்களில் உள்ள பயனர்கள், 'ஜியோ ட்ரூ 5ஜி' சேவைகளை பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக, ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகரங்களில் உள்ள, ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், 'வெல்கம் ஆபர்' வாயிலாக, 'அன்லிமிடெட் டேட்டா'வை , 1 ஜி.பி.பி.எஸ்., வேகத்தில், கூடுதல் கட்டணம் எதுவுமின்றி அனுபவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பாண்டுக்குள், நாட்டிலுள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!