ADVERTISEMENT
கொச்சி, லட்சத்தீவு 'மாஜி' எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை, கேரள உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில், 2009 லோக்சபா தேர்தலின் போது, காங்., கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.எம். சயீதின் மருமகன், முகமது சாலிக்கை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில், தேசியவாத காங்.,கின் எம்.பி.,யாக இருந்த முகமது பைசல், உட்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
லட்சத்தீவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், முகமது பைசல் உட்பட நான்கு பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பைசல் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லட்சத்தீவு நிர்வாகம், 'நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அசைக்கும் விதமாக தீர்ப்பு உள்ளது' என கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அந்த பெரிய நாட்டாமைக்கு ஒரு சுப்ரீம் நாட்டாமை.