நில அபகரிப்பு தொடர்பான ரூ.81.98 கோடி சொத்து மீட்பு
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு செயல்படுகிறது. இதில், வங்கி, நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவுகள், சைபர் கிரைம், கந்துவட்டி, ஆவணங்கள் மோசடி மற்றும் விபசார தடுப்பு பிரிவுகள் உள்ளன.
கடந்த, 2022ல், மத்திய குற்றப்பிரிவு போலீசார், 517 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், நிலுவையில் இருந்த, 1,058 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், 30 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 71 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். 97 வழக்குகளில், நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 236 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளிகள், 65 பேருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கினர். அதேபோல, 7,096 புகார்கள் பெற்றுள்ளனர். இவற்றில், 6,591 புகார்கள் மீது விசாரணையை முடித்துள்ளனர். நிலம் அபகரிப்பு தொடர்பாக, சட்ட ரீதியாக, 81.98 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒப்படைத்து உள்ளனர். அதேபோல, மற்ற வழக்குகளில், 95.85 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றிஉள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!