ஏர்போர்ட் வணிக வளாகம் பிப்., 4ல் திறக்க திட்டம்
சென்னை, சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆறு அடுக்குகள் உடைய இந்த வளாகத்தில், வாகன நிறுத்தம், 2022 டிச., 4ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், இதில் உள்ள வணிக வளாகங்கள், வரும் பிப்., 4ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
வாகன நிறுத்தம் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்த நிலையில், வணிக வளாகம் பிப்., 4ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது.இதை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா துவக்கி வைக்க உள்ளார். அப்போது, உணவு வளாகப் பகுதி செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதற்கு முன்னதாக திரையரங்கம் செயல்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!