எக்ஸ்ரேக்கு கூடுதல் கட்டணம்? மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு
சென்னை சென்னை பல் மருத்துவமனையில் 'எக்ஸ்ரே'க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, அவரது சமூக வலைதள பக்கத்தில், சென்னை பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'எக்ஸ்ரே' எடுக்க, 5 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாய் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக பதிவிட்டிருந்தார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பல் மருத்துவமனை முதல்வர் டாக்டர் விமலா கூறியதாவது:
பல் வலி காரணமாக சிகிச்சைக்கு வருவோருக்கு, நான்கு நிலைகளில், 'எக்ஸ்ரே' தேவைப்படுகிறது. எனவே, ஒரு நிலைக்கு ஐந்து ரூபாய் என, 20 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கும், நான்கு நிலைகளில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று எடுப்பதன் வாயிலாக, மீண்டும், மீண்டும் அவர்கள் வரிசை நிற்பது தவிர்க்கப்படுவதுடன், நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமமும் தவிர்க்கப்படும். மற்றபடி ஐந்து ரூபாய் கட்டணத்தில் தான் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!