பாழடைந்த எஸ்கலேட்டர் சீரமைப்பு
திருமங்கலம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, திருமங்கலம் பகுதியில் குப்பையால் பாழடைந்து கிடந்த, 'எஸ்கலேட்டரை' நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று சீரமைத்தனர்.
அண்ணா நகர் மண்டலம் 104வது வார்டில், திருமங்கலம் பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள 100 அடி சாலையில், பொதுமக்கள் சாலையைக் கடப்பதற்காக, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில், இருபாதைகளிலும் 'எஸ்கலேட்டர்' உள்ளது. இதை தற்போது, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சாலையைக் கடந்து செல்ல பொதுமக்கள் வசதிக்காக இந்த 'எஸ்கலேட்டர்' அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு பாதுகாவலர் உள்ளார்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இந்த இயந்திரம் இயக்கப்படும். இதனால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் பயனடைந்து வந்தனர்.
தற்போது, இந்த எஸ்கலேட்டர் ஒருபுறமான, பாடியில் இருந்து திருமங்கலத்தை நோக்கிச் செல்லும் பாதையில், பல மாதங்களாக பயன்பாடின்றி பாழடைந்து கிடந்தது.
எஸ்கலேட்டர் முழுதும் இலைகள் மற்றும் குப்பை குவிந்திருந்தது. இது குறித்து நேற்று, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று, எஸ்கலேட்டர் மற்றும் நடைபாதைகளில் இருந்த குப்பையை அகற்றி துாய்மைப்படுத்தி, எஸ்கலேட்டரை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!