Load Image
Advertisement

புழுதிக்காடான நெடுஞ்சாலை துறை சாலை



வளசரவாக்கம், மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து புழுதிக்காடாக மாறியுள்ள, மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலையை சீர் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டில் திருவள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதில், வளசரவாக்கம் கைகான் குப்பம் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்த நிலையில், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது.

இதனால், அச்சாலை குண்டும் குழியுமாக மாறியதுடன், புழுதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் அதிக அளவில் துாசு பறப்பதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டு ஜன்னல்களை திறக்க முடியாத நிலை உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளும், கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் தார்ச் சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement