சாலை மட்டத்தை விட தாழ்வான நுாலகம் புதிதாக அமைக்க வாசகர்கள் கோரிக்கை
போரூர், சாலை மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்வாக உள்ள மாவட்ட நுாலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போரூர் மெய்யம்மை தெருவில், மாவட்ட நுாலகம் உள்ளது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பல வகையான புத்தகங்கள் உள்ளன.
மிகவும் பழமையான இந்த நுாலக கட்டடம், சாலை மட்டத்தில் இருந்து, 3 அடி அளவுக்கு தாழ்வாக அமைந்துள்ளது.
இதனால், மழைக்காலங்களில் இந்த நுாலகத்தில் தண்ணீர் தேங்கி, புத்தகங்கள் சேதமடைந்து வந்தன.
இதையடுத்து, கீழே இருந்த புத்தகங்கள் அனைத்தும், பாதுகாப்பாக இரண்டாவது தளத்திற்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, இந்த நுாலக கட்டடத்தில் போதிய இட வசதிகள் இல்லை.
இது, வாசகர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கூறுகின்றனர். எனவே, இந்த பழைய கட்டடத்தை இடித்து விட்டு, சாலை மட்டத்தை விட உயரமாக புதிய நுாலக கட்டடம் அமைக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!