வார்டு எல்லை பிரச்னையால் சாலையின்றி மக்கள் தவிப்பு
புழல், மாதவரம் மண்டலம், புழல் அடுத்த சூரப்பட்டு, பிரிட்டானியா நகரில், மழை நீர் வடிகால் பணிகள் நடந்து முடிந்த இடங்களில், பாதுகாப்பான சாலைகள் அமைக்கப்படவில்லை.
ஒரு சில சாலைகளை அமைக்க, மூன்று மாதத்திற்கு முன், ஜல்லி கற்கள் கொட்டி பரப்பி விடப்பட்டன. ஆனால், இன்று வரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், முதியவர், நோயாளிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள், மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தால், 31, 32வது வார்டுகளின் எல்லை பிரச்னையை காரணமாக்கி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அதிருப்தி அடைந்துள்ள பிரிட்டானியா நகர் மக்கள், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், தங்கள் பகுதியின், 'அவல நிலை' குறித்தும், மாதவரம் மண்டல அலுவலகம் அருகே, விளம்பர பேனர் வைக்க முடிவு செய்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!