விளையாட்டு திடல் திறப்பு ஆசிர்வாதபுர மக்கள் மகிழ்ச்சி
துறைமுகம், சென்னை, துறைமுகம், ஆசிர்வாதபுரம், பிரகாசம் சாலையை சுற்றி, பி.ஆர்.எல்.கார்டன், ஆசிர்வாதபுரம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், விளையாட்டு திடல் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாநகராட்சி சார்பில், 1.89 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு திடல் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் கட்டும் பணி துவங்கி நிறைவடைந்தது.
இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.பி., தயாநிதி மாறன், அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சேகர்பாபு நேற்று முன்தினம் திறந்து வைத்தனர்.
மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, உதவி செயற்பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் கோபிநாதன், கவுன்சிலர் பரிமளம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதில், 70 லட்சம் ரூபாய் செலவில், 1,400 சதுர அடியில், நவீன உடற்பயிற்சி கூடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் ஆண்களுக்கெனவும், முதல் தளத்தில் பெண்களுக்கெனவும் பிரத்யேகமாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் 8 லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் 21 லட்சம் ரூபாய் செலவில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
51 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் 15 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிர்வாதபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!