பஸ்சில் முதியவரிடம் ஆட்டை
வியாசர்பாடி, செங்குன்றம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி, 75. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர், நேற்று மின்ட் பேருந்து நிலையத்தில் இருந்து, செங்குன்றம் செல்லும் தடம் எண்: 57 பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது கூட்டம் அதிகம் இருந்ததால் நின்றபடி ராஜாமணி பயணம் செய்துள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் வந்ததால், ராஜாமணி, தான் கையில் வைத்திருந்த பையை கீழே வைத்து கம்பியை பிடித்தபடி நின்றிருந்தார்.
அந்த பையில் ஒரு லட்ச ரூபாய் மற்றும் 1 சவரன் தங்க மோதிரமும் இருந்துள்ளது. இந்நிலையில் வியாசர்பாடி பேருந்து நிலையம் வந்தபோது கீழே வைத்திருந்த பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!