உதயநிதியை சூழ்ந்த மக்கள்
மூலக்கொத்தளம், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து நடராஜன், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோரது நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். மூலக்கொத்தளம் சந்திப்பில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து வந்த உதயநிதி, மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள தாளமுத்து நடராஜன், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தி கிளம்பினார்.
அப்போது திடீரென அமைச்சர் உதயநிதியை, 'ஓட்டு கேட்க மட்டுமே இங்கு வருவதாகவும், பின் மக்களை கண்டு கொள்வதில்லை' எனக்கூறி மக்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் உதயநிதி, மக்களின் கோரிக்கைகளை நின்று கேட்டு, பின் புறப்பட்டு சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!