ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவின் 'யு.பி.ஐ., ஆதார்' போன்ற தொழில்நுட்ப வசதிகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய நாடுகளுடன், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்தியாவின் இந்த தொழில்நுட்ப சேவை வசதிகளை, 5 _ 7 நாடுகள் ஏற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து ள்ளார்.
தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் 'இந்திய ஸ்டாக் டெவலப்பர்'கள் மாநாட்டில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த உதவும் வகையில், இந்திய தொழில்நுட்பத் தள வசதிகளை, பிற நாடுகளுக்கும் வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'ஜி 20' கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்தி 'ஆதார், யு.பி.ஐ., கோ வின், ஜி.எஸ்.டி.என்., டிஜி லாக்கர்' உள்ளிட்ட தொழில்நுட்ப இயங்குதளங்களை பிற நாடுகளுக்கும் வழங்குவதன் வாயிலாக, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலை உலகளவில் விரிவுபடுத்த முடியும் என நம்புகிறோம்,
இதன் அடிப்படையில் இந்த தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஐந்து முதல் ஏழு நாடுகள், வரும் மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!