ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு
திருநின்றவூர், திருநின்றவூர் அடுத்த செவ்வாய்பேட்டை - புட்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று காலை 9:00 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக, திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரயில்வே போலீசார், அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த போது, சென்னைக்கு சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!