ADVERTISEMENT
மும்பை: மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், நிதி தீர்வுகளை வழங்க, 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஜா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர் வசதிக்கேற்ப மாதத் தவணை செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய மின்சார வாகன சந்தையை ஆட்டிப்படைத்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிட்டத்தட்ட 85.8 சதவீத சந்தை பங்கினை கட்டி ஆள்கிறது. அத்துடன், இந்தியா முழுதும், 57 ஆயிரத்துக்கும் அதிகமான டாடா மின்சார வாகனங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!