தொழிலாளி உயிரை காவு வாங்கிய மது
ஆவடி, திருத்தணி பழைய சந்தை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 55. இவர், ஆவடி கன்னட பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, கார்பென்டராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் மது அருந்தி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலாளி, அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!