ADVERTISEMENT
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில், கலைஞர் நகர் முதல் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், தினமும் 500 மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இங்குள்ள, கலைஞர் நகர் 6வது தெரு அருகே உள்ள மின் கம்பம், பல மாதங்களாக சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இது குறித்து பலமுறை மின் வாரியத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மின் கம்பத்தில் இருந்து விழுந்த சிமென்ட் உதிரி, சாலையில் சென்றவர் மீது விழுந்து காயம் ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆதிகேசவன், ஆவடி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!