ADVERTISEMENT
ஆப்கானிஸ்தான்:தாலிபான்கள் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில், 'என்டாப்' என்ற ஆப்கானிஸ்தான் நிறுவனம், 'மாடா 9' என்ற சூப்பர் காரை வடிவமைத்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரின் 'வீடியோ'வை, தாலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வறுமை விகிதம், 20 ஆண்டு கால உள்நாட்டு போர், தற்போதைய தாலிபான்கள் ஆட்சி ஆகிய அனைத்தையும் கடந்து, அந்நாட்டின் 30 பொறியாளர்களால் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டில் வெளியான 'டொயோட்டா கொரோலா' காரின் இன்ஜினை மாற்றியமைத்து, 5 ஆண்டுகளாக பாடுபட்டு, இந்த காரை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
காரின் வடிவமைப்பை பார்க்கும்போது, 'ஆஸ்டன் மார்ட்டின்' காரைப் போன்ற லுக்கில், எல்.இ.டி., ஹெட் லைட் டுகளுடன் மிகவும் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது.
இந்த கார், என்டாப் நிறுவன தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு இந்த காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!