முன்னோர்களின் வாழ்வியல் முறை சிறுதானிய கலைவிழாவில் விளக்கம்
சென்னை,முகலிவாக்கத்தில் நடந்த சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் கலை விழாவில், மாணவர்களுக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
அகில உலக சிறுதானிய ஆண்டின் துவக்கத்தைக் குறிக்கும் விதமாக, சென்னை முகலிவாக்கத்திலுள்ள ஆலஜி டெக் பள்ளி வளாகத்தில், சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய கலை விழா விமரிசையாக நடந்தது.
விழாவில், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விளைவிப்பது முதல், அறுவடை செய்வது வரை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல், அவற்றை அன்றாட உணவில் ஒரு பகுதியாகவும், வாழ்வியல் முறையாகவும் கொள்வது குறித்தும் பேசப்பட்டது.
இத்துடன், மாணவர்களுக்கு முன்னோர்களின் உணவு, வாழ்க்கை முறை குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்வில், மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்களுக்கான செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை உடனடியாக, பிரபல நிறுவனம் வாங்கியது.
முன்னதாக, சிறுதானியங்களைக் கொண்டு சித்திரங்கள் வரைதல், நெருப்பில்லா சமையல், காகிதத்தில் மாதிரியாக்கங்கள் செய்தல், கயிறு திரித்தல், பொம்மலாட்டம், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், சித்த மருத்துவர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை வேளாண்மை சங்கத் தலைவர் அசோக்குமார், நெல் ஜெயராமன் அறக்கட்டளை தலைவர் ராஜீவ், நடிகை மற்றும் இயக்குனர் லக் ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!