இளைஞர் கொலை ஏழு பேர் சிக்கினர்
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில், 15ம் தேதி சந்தோஷ், 20, என்ற இளைஞர் பலியானார். அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், மேடையில் ஆடுவது தொடர்பாக, கண்ணகி நகர் மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ஒன்பதாவது நாள் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இரவு, மீண்டும், இரண்டு தரப்பும் மோதிக் கொண்டனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, சைதாப்பேட்டை, நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த உமர்பாஷா, 19, வெட்டி கொலைசெய்யப்பட்டு கிடந்தார். சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நடந்த மோதலில், பழிதீர்க்க உமர்பாஷா கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக, சைதாப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், 20, பிரகாஷ், 21, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சக்திவேல், 20, சரண், 19, ஆகியோரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!