ஐ.சி.எப்., - ஜி.எம்.,மாக மால்யா பொறுப்பேற்பு
சென்னை, சென்னை ஐ.சி.எப்., ஆலையின் புது பொது மேலாளராக பி.ஜி.மால்யா நேற்று பொறுப்பேற்றார்.
இந்திய ரயில்வேயில், 1985ம் ஆண்டு மின் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
இவர், டில்லி ஐ.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்றவர். தனது 30 ஆண்டு கால ரயில்வே சேவையில் தெற்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, ஐ.சி.எப்., மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.
புத்தகங்கள் படிப்பது, ஓவியம் வரைவது, நாடகங்கள், இசையில் பெரும் ஆர்வம் உள்ளவர்.
நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, சீனா, ஈரான் மற்றும் சுவிட்சர்லாந்தில் ரயில்வே தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.
குண்டக்கல் மற்றும் பிலாஸ்பூர் ரயில்வே கோட்டங்களில் கோட்ட மேலாளராக பணியாற்றிய இவர், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எப்., ஆலையின் பொது மேலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!