கூடைப்பந்தில் டி.ஜி.வி., முதலிடம்
சென்னை, மாநில கூடைப்பந்து போட்டியில், அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரி அணி 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.
ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையில் மாநில அளவிலான கூடைப்பந்து 'சாம்பியன்ஷிப்' போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தன. இந்த போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மொத்தம் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்று விளையாடின.
முதல் அரையிறுதிச் சுற்றில் அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரி அணி, 62 - 39 என்ற கணக்கில் ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி அணியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில், செயின்ட் ஜோசப் அணி, 73 - 45 என்ற கணக்கில் ஈஸ்வரி கல்லுாரியை வீழ்த்தியது.
அனைத்து போட்டிகள் முடிவில், இறுதிப் போட்டியில், டி.ஜி., வைஷ்ணவ மற்றும் செயின்ட் ஜோசப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 77 - 57 என்ற கணக்கில் டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தியது. அபாரமாக விளையாடிய அணி வீரர் புகழேந்தி, 23 புள்ளிகளுடன் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!