கோ - கோவில் எத்திராஜ் சாம்பியன்
சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, 'ஏ' மற்றும் 'பி' மண்டல அளவில் முன்னிலை பெறும் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன.
அந்த வரிசையில், மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் 'கோ - கோ' போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், 'பி' மண்டல அளவில் வெற்றி பெற்ற எத்திராஜ் கல்லுாரி அணியும், 'ஏ' மண்டல அளவில் வெற்றி பெற்ற எஸ்.ஐ.இ.டி., மற்றும் இணைப்பு அணிகள் மோதின.
முதல் போட்டியில், எத்திராஜ் அணி, 13 - 6 என்ற கணக்கில் 'ஏ' மண்டல இணைப்பு அணியை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து, 'பி' மண்டல இணைப்பு அணியையும் 9 - 5 என்ற கணக்கில் எத்திராஜ் அணி தோற்கடித்தது வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில், எத்திராஜ் மற்றும் எஸ்.ஐ.இ.டி., அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான ஆட்டத்தில் எத்திராஜ் அணி 6 - 5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!