மாநில வாலிபால் போட்டி: சென்னை அணிகள் அபாரம்
சென்னை, தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் 'சாம்பியன்ஷிப்' போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 58 பள்ளி அணிகள் உட்பட மொத்தம் 84 அணிகள் பங்கேற்றுள்ளன.
பள்ளிகளுக்கு இடையே நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், மாணவியரில் சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி, 25 - 23, 25 - 18 என்ற கணக்கில் துாத்துக்குடி போப்ஸ் பள்ளியையும், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, 25 - 11, 25- - 16 என்ற கணக்கில், நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு பள்ளியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தன.
அதேபோல், சென்னை டான் பாஸ்கோ பள்ளி, 25 - 23, 23 - 25, 25 - 23 என்ற கணக்கில், விருதுநகர் நாடார் பள்ளியை தோற்கடித்தது.
அதேபோல், மாணவியருக்கான காலிறுதியில், சென்னையில் உள்ள ரோட்லர் அரசு பள்ளி, எல்.எஸ்.எஸ்., பள்ளி, குமுதா பள்ளி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஆடவர் கல்லுாரி அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், எஸ்.டி.சி., பொள்ளாட்சி அணி 25 - 22, 25 - 13 என்ற கணக்கில், சென்னை சத்யாபாமா அணியையும், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 19, 25 - 16 என்ற கணக்கில் பனிமலர் அணியையும், சத்யபாமா 25 - 18, 25 - 18 என்ற கணக்கில் பாரத் கல்லுாரியையும் வீழ்த்தியது.
மகளிர் போட்டியில், வேல்ஸ் அணி, 25 - 8, 25 - 24 என்ற கணக்கில் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரியை வீழ்த்தியது. இன்று பள்ளிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!