வேலுார்:ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், தமிழக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு சேகரிப்போம் என இ. கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
இது குறித்து வேலுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே மொழி போன்றவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ., தேர்தல் சரிவுகளை சந்தித்து வருகிறது. அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழக கவர்னர் தேனீர் விருந்துக்கு எங்களையும் மரியாதையுடன் அழைத்திருந்தார். ஆனால் கவர்னராக செயல்படவில்லை என்பதால் அதனை நாங்கள் புறக்கணிக்கின்றோம். யார் தேனீர் விருந்துக்கு சென்றாலும் கவலையில்லை. ஆன் லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பியனுப்பி மீண்டும் அவர் கேட்ட விளக்கங்களை அரசு அனுப்பியுள்ளது. உடனே இதற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புக்கள் தடுக்கப்படும்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவித்தவுடன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதித்து அழைத்து பேசி காங்கிரசுக்கே போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார்.
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை எடுத்துக் கூறியும், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தருவோம்.
நெய்வேலி சுரங்கத்திற்கு மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் போது அங்குள்ள விவசாயிகளையும் அழைத்து பேசி அவர்கள் கருத்துக்கள் கேட்டு தான் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும். தவறினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இடைத்தேர்தலில் பா.ஜ., போட்டியிடும் என முதலில் அறிவித்தார்கள். தற்போது பா.ஜ., ஓடி ஒளிந்து கொண்டுள்ளது. கம்யூ., சிந்தாந்தங்களை அண்ணாமலை முழுமையாக படிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கடந்த தாலங்களில் நாங்கள் போராடினோம். இப்போதும் பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர முதல்வரிடம் கேட்டுள்ளோம். நிதி நிலை சீரானால் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இதே போலத்தான் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நிலுவையில் உள்ளது. குஜராத் சம்பவம் குறித்து பி.பி.சி., ஆவண படம் வெளியிட்டதை இந்த அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., லதா, மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு உடனிருந்தனர்.
வாசகர் கருத்து (11)
கொத்தடிமைகளுக்கு இரு நூறு ரூபாய்... உண்டியல் குலுக்கிகளுக்கு இருபது கோடி ரூபாய்...அவ்வளவுதான் விஷயம்
கல்லடியை விட்டுடீங்க
கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் பெற்ற 25 கோடிக்காக எத்தனை வருடம் பேசுவீங்க.? கடைசிவரைக்கும் தன்மானத்தை விட்டு சுய நலத்துக்காக தான் செயல்படப் போறீங்களா?
இப்போ எவ்வளவுட சூட்கேஸ் வந்தது ? பெண் போலீசுக்கே பாதுக்காப்பு கொடுக்க முடியாத அரசு இது அதனையும் சொல்லி கேளுடா , இப்படியே போனதென்றால் உன் வீட்டு பெண்கள் சாலையில் போனாலும் திமுக இளசுங்க ஆட்டம் போடும் என்பதனை மறக்காதே . அதனையும் சொல்லி கேளு . கோவையில் தீவிரவாதி வைத்து வெடிகுண்டுக்கு கேஸ் சிலிண்டர் தானாக வெடித்தது என்று எழுதிய அரசின் போக்கை சொல்லி கேளுடா
சாமானியன் எவ்வளவு வரியை தாங்குவது..மீண்டும் பழைய ஓய்வூதியம் என்ற பேச்சே கிடையாது, வேனும்னா பழைய ஊதியத்தை தர்றோம், இல்லையென்றால் வேறு வேலைக்கு செல்லலாம்..
ஐயா தயவு செய்து சொல்லி ஒட்டு கேளுங்க .மக்கள் மறந்து போகிறார்கள் .நினைவு படுத்தினால்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள்.அந்த கோடி பணம் பற்றியும் சொல்லுங்க,யாருக்கு அந்த மனம் வரும்.