ADVERTISEMENT
ஜனவரி 26, 1924 -
சென்னை, மயிலாப்பூரில், தண்டரை குமாரஸ்வாமி உமாபதி -- ஞானாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1924ல் இதே நாளில் பிறந்தவர், சுப்பிரமணியம் எனும் மணியம். மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளியில் படித்த இவர், தன் சித்தப்பா லிங்கய்யா, அவரின் நண்பர் ராஜத்தின் திண்ணை ஓவியங்களைப் பார்த்து ஆர்வமானார்; பின், எழும்பூர் ஓவியப் பள்ளியில் சேர்ந்து, முதல்வர் ராய் சவுத்ரியிடம் ஓவியம் கற்றார்.
கடந்த, 1941ல், கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகி, 'கல்கி' இதழை துவக்கிய போது, இவரின் திறமையை அறிந்து, இவரை முழு நேர ஓவியராக்கினார். 1950ல், 'பொன்னியின் செல்வன்' நாவல் வெளியானது. அதற்கு, கதையின் சூழலை உள்வாங்கி, கலைநயத்துடன் நுட்பமாக கதாபாத்திரங்களைப் படைத்தார். கல்கியின் நாவலான, 'பார்த்திபன் கனவு' படமான போது, கலை இயக்குனராகவும் இருந்தார்.
இவர், 1968, செப்டம்பர் 29ல், தன், 44வது வயதில் காலமானார். அன்றைய குந்தவையையும், நந்தினியும் இன்றைய திரையில் ஒயிலாக வர, ஓவிய ஒப்பனை தந்த, கலைஞனின் நுாற்றாண்டு துவக்க தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!