Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Tamil News
ADVERTISEMENT
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகளை, தகுதியுடைய அனைத்து இந்திய மக்களுக்கும் கொடுக்க வேண்டும். வாக்காளர்களும் தங்களது கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் ஓட்டளிக்க முன்வர வேண்டும்; எவரும் ஒருபோதும் ஓட்டுக்காக, எவ்வித முறைகேடுக்கும் உட்படக் கூடாது.

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல, இவங்க, 'சீட்'டை தட்டிப் பறிச்ச, 'அ.தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கக் கூடாது'ன்னு மறைமுகமா வாக்காளர்களுக்கு, 'அட்வைஸ்' பண்றாரோ?மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்காமல் ஏமாற்றுகிறது. மத்திய அரசு ஆட்சி முடியும், 2024 வரை, ஒரு பிடி மண்ணை கூட எய்ம்ஸ் திட்டத்துக்கு எடுத்து வைக்காது. பா.ஜ., ஆட்சி, 2024ல் முடிவுக்கு வரும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் போது, நிறுத்தப்பட்ட எய்ம்ஸ் திட்டமும், சேது சமுத்திரத் திட்டமும் செயல்பட துவங்கும்.
'கனவு காணுங்கள்' என, நம்ம கலாம் சொன்னதை, 'காம்ரேட்'கள் கச்சிதமாக கடைப்பிடிக்கிறாங்க போலும்!

தமிழக காங்., தலைவர் அழகிரி பேச்சு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மிகுந்த நம்பிக்கையோடு, தைரியத்தோடு, பா.ஜ., மாநில தலைவர், அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்... அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்.

அ.தி.மு.க.,வை சந்திப்பதை விட, அண்ணாமலையை சமாளிப்பது சுலபம் என, அழகிரி கருதுகிறாரோ?

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் குறித்து தெரிந்தும், தெரியாதது போல பேசி நடிக்கிறார். மக்களை தேடி மருத்துவம், உலகளவில் பாராட்டை பெற்றுள்ளது.

பயனாளிகள், 1 கோடி பேரின் பெயர் பட்டியலை வெளியிடுவதாக, பழனிசாமிக்கு சவால் விடுத்தீங்களே... அதே மாதிரி, உலக அளவுல உங்களை பாராட்டிய நாடுகளின் பெயர்களையும் வெளியிட்டா என்ன?

காங்., முன்னாள் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில், இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்பது, காங்., தலைமை எடுத்த முடிவு; இதில், தி.மு.க.,வின் தலையீடு இல்லை. ராகுலின் ஒற்றுமை யாத்திரை, இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திஉள்ளது.

இளங்கோவன் போட்டியிடுவது யாரோட முடிவா இருந்தா என்ன...? ஆனா, அவர் ஜெயிப்பது, தி.மு.க.,வினர் கைகளில் தான் இருக்குது!***
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement