நில அபகரிப்பு தொடர்பான ரூ.81.98 கோடி சொத்து மீட்பு
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு செயல்படுகிறது. இதில், வங்கி, நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவுகள், சைபர் கிரைம், கந்துவட்டி, ஆவணங்கள் மோசடி மற்றும் விபசார தடுப்பு பிரிவுகள் உள்ளன.
கடந்த, 2022ல், மத்திய குற்றப்பிரிவு போலீசார், 517 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், நிலுவையில் இருந்த, 1,058 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். 97 வழக்குகளில், நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 236 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளிகள், 65 பேருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கினர். அதேபோல, 7,096 புகார்கள் பெற்றுள்ளனர். இவற்றில், 6,591 புகார்கள் மீது விசாரணையை முடித்துள்ளனர். நிலம் அபகரிப்பு தொடர்பாக, சட்ட ரீதியாக, 81.98 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒப்படைத்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!