கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர் மகனுடன் வீடு திரும்பினார்
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்குமார். மனைவி ரோஜா, 44.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முதல் வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.
நேற்று முன்தினம், இவரும், இவரது மகன், ஜேக்கப், 22, என்பவரும், வீட்டில் இருந்து மாயமாகினர். வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்டு டிஸ்க்'கும் மாயமானது. அவர்கள் இருவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.
இதையடுத்து, அவர்கள் கடத்தப்பட்டதாக, பாதிரிவேடு போலீசில் ரமேஷ் குமார் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், மாவட்ட எஸ்.பி., கல்யாண் தலைமையில், விசாரணை மேற்கொண்டனர். நான்கு தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவே, ரோஜாவும், அவரது மகனும், அதே காரில் வீடு திரும்பினர். அவர்களிடம், போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், 'முகமூடி அணிந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கத்தி, துப்பாக்கி முனையில், அவர்களை காரில் கடத்தி, ஆந்திர வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஒரு இடத்தில், அனைவரும் இறங்கி, மது குடிக்க சென்றனர்.
அப்போது, ரோஜா அழுது கொண்டிருந்ததை கண்ட கார் டிரைவர், அவர்கள் காருடன் தப்பிக்க உதவியுள்ளார்.
அங்கிருந்து காரில் தப்பிய இருவரும், சத்தியவேடு வழியாக வீட்டிற்கு வந்தனர். கடத்தியவர்கள் ரோஜாவின் கணவர் ரமேஷ் குமார், ரோஜா சகோதரர் டேவிட்சன் மீது, கடும் கோபத்தில் இருந்ததுள்ளனர்' என்பது தெரிய வந்தது.
அவர்கள் அளித்த தகவல், முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினர் என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!