Load Image
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.,வில் ரூ.1.3 கோடி வசூல்

ஸ்ரீபெரும்புதுார்:

கடந்த 6 மாதங்களில் சாலை பாதுகாப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட அபராதம் விபரம்

அதிக சுமை 95,50,000அதிக வேகம் 1,05,000சீட் பெல்ட் 1,75,000தலைக்கவசம் 30,000அதிக ஒலிப்பான் 3,20,000பார்க்கிக் லைட் இயக்காதது 75,000 ரிப்ளெக்டர் பொருத்தாதது 42,500மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் 20,000மொத்தம் 1,03,17,500



ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில், சாலை விதிமுறை மீறிய வாகனங்களிடம் இருந்து, கடந்த ஆறு மாதங்களில், ஒரு கோடியே 3 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் வழியே, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில், பல வாகனங்கள் அதிக சுமை ஏற்றி செல்வது, மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களால் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன.

விபத்தை தடுக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகன சோதனையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறையை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement