ADVERTISEMENT
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், வேதாசலம் நகர் பகுதியில், அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் ஏழு, அழகேசன் நகரில், அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.
இதே போன்று, காஞ்சிபுரம் சாலையில், ஐந்து தனியார் பள்ளிகள் உள்ளன. தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டு நகரை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள், அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களுக்கு வந்து செல்கின்றனர். நகரில், இராண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ, 'ஷேர்' ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இதில், ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை இல்லாமலும், பெரும்பாலான ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் இயக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் ஆட்டோக்களை இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
பழைய, புதிய பேருந்து நிலையம், காஞ்சிபுரம் சாலை, வேதாசலம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போலீசார் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்துகின்றனர்.
இதை சீரமைக்க, போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதில்லை. பள்ளி நேரங்களில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முக்கிய பகுதிகளில், போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும்.
நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் கூறியதாவது:
செங்கல்பட்டு நகரில், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களின் ஆவணங்கள் குறித்து, விசாரணை செய்யப்படும். ஆவணம் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!