ADVERTISEMENT
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பாரம்பரிய அரசி வகைகளில், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்து, பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் விமலா ராணி துவக்கி, செயல்முறை விளக்கம் அளித்தார். பாரம்பரிய அரிசி வகைகளான கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, இலுப்பை பூ சம்பா, கருடன் சம்பா உள்ளிட்ட அரிசி வகைகள் குறித்தும், அவற்றில் உள்ள சத்துகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இவற்றில் செய்யப்படும் பொருட்கள் தயாரித்து காண்பிக்கப் பட்டன.
இவ்வாறு தயாரிக்கப்படும் உணவு பொருள்களை சந்தைப்படுத்தும் முறை, விலை நிர்ணயம், விற்பனை வாய்ப்புகள்குறித்தும் விளக்கப்பட்டன.
இந்த பயிற்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அச்சிறுபாக்கம், உத்திரமேரூர் பகுதிகளில், பாரம்பரிய நெல் பயிரிடும் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!