ADVERTISEMENT
மாமல்லபுரம்:மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் சர்வதேச பயணியர், சிற்பக்கலையில் ஆர்வத்துடன் உள்ளனர். அத்தகைய பயணியருக்கு, இங்குள்ள தனியார் சிற்பக்கூடமான, 'கிரியேட்டிவ் ஸ்கல்ப்ட்சர்ஸ்' நிறுவனம், இக்கலையை அவர்களுக்கு பயிற்றுவித்து உதவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி - மார்ச் மாதங்களில், சுற்றுலா வரும் பயணியருக்கு, இந்த சிற்பக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மூன்று ஆண்டுகளாக தடைபட்ட பயிற்சி, தற்போது மீண்டும் துவக்கப்பட்டது.
நேற்றைய துவக்க நிகழ்ச்சியில், தமிழக கலை, பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி, இப்பயிற்சியை துவக்கினார்.
சர்வதேச கற்சிற்ப பயிற்சி பட்டறை தலைவரான, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஸ்டெபனோ பிகாரி, கல்லின் நீள அகல, உயர அளவை பொறுத்து, இந்திய கடின பாறையிலும் சிலை வடிக்கும் திறன் குறித்து, இயக்குனரிடம் விளக்கினார்.
அரசு விருது பெற்ற சிற்பக் கலைஞர் பாஸ்கரன், அரசு கட்டட, சிற்பக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!