ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி பேரூராட்சியாக இருந்து, சில மாதங்களுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அமர்வதற்கு, போதிய இட வசதி இல்லை. இதனால், புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
தொடர்ந்து, மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின், நேற்று காலை 11.00 மணிக்கு, அமைச்சர் அன்பரசன் தலைமையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதேபோல், நெல்லிக்குப்பம் சாலையில், ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில், அறிவு சார் மையத்திற்கு புதிய கட்ட டங்கள் கட்டுவதற்கும், பூமி பூஜை போடப்பட்டது.
இந்த கட்டடங்கள், இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் கார்த்திக், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, கவுன்சிலர்கள் மற்றும் அரசுஅதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!