கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2023 ஆண்டு தோறும்பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பத்மவிருதுக்கு தேர்வு பெற்ற 106 பேரின் பெயர்கள் இன்று (ஜன.25) மத்திய அரசு வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி. சடையன், மற்றும் சினிமா பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

அதன் விவரம்:
பத்மவிபூஷன்: (6)
1) திலீப் மஹாலானபிஸ் (மருத்துவத்துறை )
2) பாலகிருஷ்ண தோஷி
3) ஸ்ரீ ஜாகீர் ஹூசேன்
4) ஸ்ரீனிவாஸ் வரதன்.
5)முலயாம்சிங் யாதவ்
6) எஸ்.எம். கிருஷ்ணா
****************
பத்மபூஷன்: (9)
1) குமார்மங்கலம் பிர்லா
2) தீபிகா தர்.
3) வாணி ஜெயராம்
4) எஸ்.எல். பைராப்பா
5) சுவாமி சின்ன ஜியார்.
6) சுமன் கல்யாண்பூர்
7) கபில் கபூர்.
8) சுதா மூர்த்தி.
9) கமலேஷ் பட்டேல்.
*****************
பத்மஸ்ரீ விருதுகள்: (91)
1) வடிவேல் கோபால்
2) ம.சி. சடையன்
3) எம்.எம். கீரவாணி
உள்பட 91 பேர் என 106 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து (8)
விருது பெறுவோர் பட்டியலில் சாதாரண மக்களில் சாதனை செய்தவர்களின் பெயர்களை பார்க்கும்போது மனம் மகிழ்கிறது.
நேர்மையான முறையில் செயல்படுகிறது என்று வெளிப்படையாக தெரிகிறதே
சமூகநீதி பத்தி பேசுறத பொழப்பா வச்சிருக்கிற கட்சிகள் செய்யாததை பாஜக செய்து சரித்திரம் படைத்திருக்கிறது போடற ஒவ்வொரு பந்தையும் மோடி சிக்ஸர் அடிச்சா எதிர்க்கட்சிகளின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமா இருக்காது போல? இனி வேலையில்லாத் திண்டாட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத்தான்
அருமை தேர்ந்து எடுத்த குழுவிற்கும் அரசுக்கும் பாராட்டுகள்
முன்பெல்லாம் யார் யாருக்கு விருது என்று தேடுவோம் அல்லது அறிய ஆவல் படுவோம். அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி தலைவர்களின் ஆட்களாக இருப்பார்கள். அறிந்த பின் இவருக்கா என்று இப்ச் ஆகிவிடும். இப்போது விருது பெற்றவர் யார் என்று தேடுகிறார்கள். அவரை பற்றி தெரிந்த பின், இவருக்கா என்று அறிந்து ஆச்சரிய படுகிறோம். சாமணியனுக்கும் விருது வழங்கி கௌரவித்து அவர்களும் பாராட்டு பெற்று மத்திய அரசும் பாராட்டு பெறுகிறது. இதற்கு பெயர் பாரத் மாடல். WHAT A GREAT MAGNIFICENT TRANSFORMATION.