ADVERTISEMENT
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளுள் ஒன்றாக, கொண்டங்கி ஏரி உள்ளது.
கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 287.94 மில்லியன் கன அடியையும், 16.11 அடி ஆழத்தையும் கொண்டது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.
மேலும், திருப்போரூர் பேரூராட்சி பகுதிக்கும், கொண்டங்கி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து, குழாய் மூலம் குடிநீர் செல்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு, 71 லட்சம் ரூபாய் செலவில், ஏரிக்கரையை பலப்படுத்துதல், மதகு, கலங்கல் சீரமைத்தல், நீர்வரத்துக் கால்வாய்கள் துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், மூன்று ஆண்டுகள் ஆனதால், ஆக்கிரமிப்பு, மதகு சேதம், கால்வாய் அடைப்பு என, பழைய நிலைக்கே ஏரி திரும்பியது.
இதையடுத்து, ஏரி பாசன சங்க தலைவர் கெஜராஜன், அமைச்சர்அன்பரசனிடம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், துார்வாரி சீரமைக்கவும் கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, அமைச்சர் ஏரியை ஆய்வு செய்து மேம்படுத்துமாறு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று பொதுப்பணித் துறையின் சென்னை மண்டல பொறியாளர், செங்கல்பட்டு மாவட்ட பொறியாளர், திருப்போரூர் ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், கொண்டங்கி ஏரியில், கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், ஏரியின் பாசன பயன்பாடு,கொள்ளளவு, ஆக்கிரமிப்பு போன்றவை குறித்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, அளவீடு செய்து, ஏரியின் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கால்வாய் துார் வாருதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள்தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!