அண்டார்டிகாவில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் இன் இன்டர்நெட் பரிசோதனை

சமீபத்தில் ஸ்பேஸ்எக்ஸ் இன் சாட்டிலைட் வழி இன்டர்நெட் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம், தன்னுடைய இணைய சேவையை அண்டார்டிகாவின் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்துள்ளது. இதற்கு முன்னர் செப், 2022ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் தனது இணைய சேவையை பூமியின் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு சேர்க்கும், என்று கூறியிருந்த நிலையில் தற்போது 3400 சாட்டிலைட்களின் வழி பல கண்டங்கள் தோறும் தனது சேவையை வழங்கி வருகிறது.
அதில் 5% மட்டும், அதாவது 181 சாட்டிலைட்கள் அன்டார்டிகா போன்ற போலார் பகுதிகளில் இயங்கி வருகின்றன. ஆனால் அதிலும் நிரந்தர இணைய சேவையானது கிடைக்கவில்லை. அண்டார்டிகாவால் மற்ற நாடுகளைப் போன்று கிரவுண்ட் ஸ்டேஷன்கள் மூலமாக இணைய சேவையை பெற இயலாது. எனவே அவர்கள் லேசர்களைப் பயன்படுத்தி தங்களை ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் கிரவுண்ட் ஸ்டேஷன்களுடன் இணைத்துக் கொண்டு இணைய சேவையைப் பெறுகின்றனர்.

தற்போது ஸ்டார்லிங் தன்னுடைய இணைய சேவையை கோல்ட்எக்ஸ்(COLDEX) என்ற பழங்காலப் பனிக்கட்டிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு வழங்கி, அந்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி வருகிறது. இந்த கோல்டெக்ஸ் நிறுவனத்திற்கு, தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) நிதி அளித்து வருகிறது.

அண்டார்டிகாவில் உள்ள கள ஆய்வு முகாமில், நடைபெற்ற செயற்கைக்கோள் இணைய சோதனை முடிவில், தன்னுடைய சாட்டிலைட் வழி இணைய சேவையை வைத்து இனைய சேவைகள் பெற முடியாத பல்வேறு பகுதிகளையும் சென்றடையும் என்றுக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!