ADVERTISEMENT
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பேரூராட்சி, திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்கும் மற்றும் மக்கா குப்பையை, வளம் மீட்பு பூங்காவில், மறு பயன்பாட்டிற்கு உற்பத்தி செய்வதிலும், முதன்மையானதாக விளங்குகிறது.
இதனால், இந்த பேரூராட்சியில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று, தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி, மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சி மற்றும் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியைச் சேர்ந்த துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேர், கருங்குழி திடக்கழிவு மேலாண்மை மற்றும் வளம் மீட்பு பூங்காவில், நேரடி களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு, கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படும் முறைகள் குறித்து விளக்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!