ADVERTISEMENT
திருப்போரூர்:இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம், ஜன., 25ல் கடைபிடிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, வாக்குரிமை பெறுவது, தேர்தலில் தவறாமல் ஓட்டு அளிப்பது உள்ளிட்டவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
திருப்போரூர் தாலுகா அலுவலகம் சார்பில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நடந்தது.
இதில், திருப்போரூர் பொறுப்பு தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் நித்யா மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். முக்கிய வீதிகள், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் சென்று, விழிப்புணர்வு பேரணியுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாமல்லபுரம்
தேசிய வாக்காளர் தினமான நேற்று, திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதி, அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரி மாணவ - மாணவியர், இது குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக பகுதியிலிருந்து, பிரதான சாலை பகுதிகளில், பேரணி சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!